உள்கட்சி தேர்தல் முடிந்தநிலையில் சேலம் மாநகரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி மாற்றம்

உள்கட்சி தேர்தல் முடிந்தநிலையில் சேலம் மாநகரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-14 21:38 GMT
சேலம்:
உள்கட்சி தேர்தல் முடிந்தநிலையில் சேலம் மாநகரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வார்டு செயலாளர்கள்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதன்படி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் வார்டு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்கட்சி தேர்தல் நடந்தது.
இந்தநிலையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
1 முதல் 60 வார்டுகளுக்கும் வார்டு வாரியாக அ.தி.மு.க. செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
அதன் விவரம் வருமாறு:-
1-வது வார்டு மாதேஸ்வரன், 2-வது வார்டு அசோக்குமார், 3. சின்னாகவுண்டர், 4. ராம் என்கிற ராமச்சந்திரன், 5. வசந்தகுமார், 6. சதீஸ் என்கிற வெங்கடேஷ், 7.ராஜ்கமல், 8.நாகராசு, 9.ராஜேந்திரன், 10.ரமேஷ், 11.நகைக்கடை இளங்கோ, 12.கலையமுதன், 13.ரமேஷ், 14.ராஜாராம், 15.ரஞ்சித்குமார், 16.பிரகாஷ், 17.ராஜேந்திரன், 18.முருகேசன், 19.ராமராஜ், 20.வெற்றிவேல், 21.மாதேஷ் என்கிற பெருமாள், 22.கே.சி.செல்வராஜூ, 23.கர்ணன், 24.கிருபாகரன், 25.மாரியப்பன், 26. ரவிக்குமார், 27.குமரேசன், 28.செந்தில்வேல, 29.ஜெகதீசன், 30,சந்தோஸ்குமார் ஆகியோர் அ.தி.மு.க. வார்டு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள்
இதேபோல், 31-வது வார்டு என்.மோகன், 32.பாலமணிகண்டன், 33.ஜெயபிரகாஷ், 34.சவுந்தரராஜன், 35.தாமரைச்செல்வன், 36.யாதவமூர்த்தி, 37.லட்சுமணன், 38.முன்னாள் எம்.எல்.ஏ.சக்திவேல், 39.மனோகரன், 40.பெருமாள்சாமி, 41.கோழி அன்பழகன், 42.டி.சேகர், 43.எம்.சேகர், 44.கெஜிராமன், 45.குணசேகரன், 46.பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. 47.ஜவகர்கோமகன், 48.மாணிக்கம், 49.சிவக்குமார், 50.பரமசிவம், 51.பி.மோகன், 52.வீரமணி, 53.தாதஹாயத், 54.செந்தில்குமார், 55.சண்முகம், 56.சேகர், 57.அழகேசன், 58.கே.பி.பாண்டியன், 59.விநாயகம், 60.ஆணைவரதன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்த்து
இதேபோல், ஒவ்வொரு வார்டுக்கும் அ.தி.மு.க. அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், பிரதிநிதிகள் என புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் அவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலத்தையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் செய்திகள்