முன்விரோத பிரச்சினையில் தாக்குதல்; வாலிபர் கைது

முன்விரோத பிரச்சினையில் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-14 21:20 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம்(வயது 57). இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். ஆண்டிமடம் அருகே உள்ள சூனாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(35). இவரது மாமனாருக்கும், சந்தானத்திற்கும் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் இருந்த சந்தானத்தை ஜெகதீஷ் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளார். இதனை தட்டிக்கேட்க வந்த சந்தானத்தின் உறவினர் புருஷோத்தமன் என்பவரிடம் ஜெகதீஷ் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சந்தானம், ஆண்டிமடம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிந்து ஜெகதீசை கைது செய்தார்.

மேலும் செய்திகள்