தொழிலாளியை கட்டையால் தாக்கியவர் கைது
தொழிலாளியை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமம் வடக்குப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் சிவக்கொழுந்து(வயது 60). கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது தாய்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சத்தம் போட்டு பேசியுள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த தனபால்(52) சிவக்கொழுந்தை பார்த்து தெருவில் சத்தம் போட்டு பேசக்கூடாது என்று தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு முற்றியதில் தனபால் கையில் வைத்திருந்த கட்டையால் சிவக்கொழுந்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவக்கொழுந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அவர் ஆண்டிமடம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து தனபாலை கைது செய்து விசாரித்து வருகிறார்.