மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி அருகே உள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 3 வாலிபர்கள் வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் மகாராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
---