காத்தவராயன் கோவில் திருவிழா
ஆலங்குளம் அருகே உள்ள காத்தவராயன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி காத்தவராயன் கம்பகாமாட்சியம்மன் கோவில் மாசி மாத திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டி காத்தவராயன் கோவில் திருவிழாவில் 108 திருவிளக்கு விளக்கு பூஜை நடைபெற்றது.