மக்கள் சந்திப்பு இயக்கம்

ராஜபாளையம் அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Update: 2022-03-14 20:58 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சி பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் பொதுமக்களை அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு குடிநீர் பிரச்சினைக்கு உடனுக்குடன் தீர்வு காண வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாருக்கு வலியுறுத்தினார். அப்போது வாருகால் சரிவர தூர்வாரபடவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் அவர்களிடமும் கூறி உடனடியாக தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர்கள், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம், கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்