சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-14 20:50 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சரவணன் (வயது 32). சம்பவத்தன்று இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை நேற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்