குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடந்தது.;

Update: 2022-03-14 20:50 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகளை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் முகாம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமிற்கு பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் கூறுகையில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. 1 முதல் 5 வயது வரை உள்ள 45,470 குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள 1,24,970 மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளிலும், 20 முதல் 30 வயதிலான 36,967 பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது, என்றார்.
இதில், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்