கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டு சிறை; பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு எடியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரை, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி பிரபல ரவுடியான முனிராஜ், அவரது கூட்டாளிகள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் முனிராஜ், அவரது கூட்டாளிகள் நவீன்குமார், பிரசாந்தை பனசங்சரி போலீசார் கைது செய்திருந்தார்கள்.
இந்த கொலை முயற்சி வழக்கு, பெங்களூரு 60-வது சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். முனிராஜ் மீதான குற்றம் ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அபராத தொகையை செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.