5 இந்து ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முஸ்லிம் சமூக ஆர்வலர்

5 இந்து ஜோடிகளுக்கு முஸ்லிம் சமூக ஆர்வலர் திருமணம் செய்து வைத்தார்.

Update: 2022-03-14 20:38 GMT
கொப்பல்:

கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா ஹிரேபன்னிகொல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமான்சாப். சமூக ஆர்வலர். இவர் 5 ஏழை இந்து ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று தனது சொந்த செலவில் 5 ஏழை இந்து ஜோடிகளுக்கு ரகுமான்சாப் திருமணம் செய்து வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் கரடி சங்கண்ணா எம்.பி., அமரேகவுடா பையாப்புரா எம்.எல்.ஏ. உள்பட அரசியல் பிரமுகர்களும், இந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றனர். 5 திருமண ஜோடிகளுக்கும் துணிகள், மாலை, அலங்கார செலவுகள் என தலா ரூ.21 ஆயிரத்தை ரகுமான்சாப் செலவு செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்