காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பனந்தாள் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் சின்ன அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மாலியா என்கிற சோனாலி(வயது 23). இவர், கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான சக்திதாஸ் என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சக்திதாஸ், சோழபுரத்தில் குடிதண்ணீர் வினியோகம் செய்து வருகிறார். இருவருக்கும் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாலியா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு மனமுடைந்த நிலையில் இருந்த மாலியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாலியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.