மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

சாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2022-03-14 20:07 GMT
சாத்தூர், 
அருப்புக்கோட்டை தாலுகா குருந்தமடம் பகுதியை சேர்ந்தவர் அன்புபாண்டி (வயது 27). எலக்ட்ரீசியனான இவர் சாத்தூர் அருகே ஒரு ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழா முடிந்ததும் மைக் செட் மற்றும் சீரியல் விளக்குகளை அவிழ்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த வயர்களை சுற்றி வைக்கும் போது  எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அன்புபாண்டி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் நகர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அன்புபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்