அனைத்து போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய அனுமதி

அனைத்து போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய அனுமதி கேட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.

Update: 2022-03-14 20:04 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
நாங்கள் விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள். எங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச போக்குவரத்து அடையாள அட்டை விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட பஸ்களில் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பார்வையற்றவர்கள் எங்களால் எந்த பஸ் விருதுநகர் கோட்டத்தை சார்ந்தது என அடையாளம் காண முடியாது. மேலும் பல சந்தர்ப்பங்களில் பஸ்களில் இருந்து இறக்கி விடப்படும் நிலை உள்ளதால் எங்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனைத்துகோட்ட பஸ்களிலும் பயணம் செய்யும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்திலும் அனைத்து கோட்ட பஸ்களிலும் பயணம் செய்யும் வகையில் அடையாள அட்டை வழங்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்