பரோலில் வந்து தலைமறைவான கைதி தற்கொலை முயற்சி

பரோலில் வந்து தலைமறைவான கைதி தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-14 19:58 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி ஊராட்சி சத்யா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). ஆயுள் தண்டனை கைதி. இவரின் தாயார் அன்னத்தாய் உடல் நலக்குறைவுடன் இருந்தார். இதனால் கருப்பசாமி பரோலில் வெளியே வந்தார். அவர் மீண்டும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு செல்லாமல் தலைமறைவானார். இவரை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் கருப்பசாமியின் உறவினர் மற்றும் அப்பகுதி மக்கள் கருப்பசாமியின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாயில்பட்டி பட்டாசு ஆலை குடியிருப்புக்கு போலீசார் சென்றனர். வெம்பக்கோட்டை போலீசார் கைதுசெய்ய வருவதை அறிந்த கருப்பசாமி அரளி விதையை அரைத்துக் குடித்து மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கருப்பசாமியின் தங்கை சாந்தி வெம்பக்கோட்டை போலீசில் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்