138 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு

138 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு

Update: 2022-03-14 19:45 GMT
திருச்சி, மார்ச்.15-
பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3,040 உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு திருச்சி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில்உள்ளகூட்டரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலமுரளி தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில்பாடவாரியாக 138 உபரி ஆசிரியர்களுக்கு (தமிழ்-10, ஆங்கிலம்-22, கணிதம்-51, அறிவியல்-39, சமூக அறிவியல்-16) பணியிடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் பிற பள்ளிகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு பணியிட மாறுதல்செய்யப்பட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்