அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ்சை நிறுத்தி தாசில்தார் அறிவுரை

அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ்சை நிறுத்தி தாசில்தார் அறிவுரை கூறினார்

Update: 2022-03-14 19:45 GMT
 விராலிமலை
விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்றில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சென்றனர். அந்த பஸ் விராலிமலை வந்தபோது ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் சென்று கொண்டிருந்தது. இதனைக்கண்டதும் அந்த வழியாக வந்த விராலிமலை தாசில்தார் சரவணன் அந்த பஸ்சை நிறுத்தி அதன் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது, குறிப்பாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுரை கூறினர். அதற்கு, விராலிமலை-கீரனூர் வழித்தடத்தில் அதிக பஸ்கள் இல்லாததே இதற்கு காரணம் என்று தாசில்தாரிடம் பயணிகள் கூறியதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய தாசில்தார், இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்