ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

வள்ளியூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-14 19:27 GMT
வள்ளியூர்:
ஏர்வாடி அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 61). இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வள்ளியூருக்கு பஸ்சில் வந்தார். பஸ் நிலையத்துக்கு வந்ததும் பஸ்சில் இருந்து முத்துலட்சுமி கீழே இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 11 பவுன் நகை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நைசாக முத்துலட்சுமியின் நகையை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, பஸ் நிலையத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். எனினும் முத்துலட்சுமியிடம் நகை பறித்த மர்மநபர் சிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்