விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சாவு
திசையன்விளையில் விபத்தில் காயம் அடைந்த டிரைவர் இறந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை ஆண்டிசெட்டி தெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் கார்்த்தி (வயது 29). மினி லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 3-ந் தேதி இரவு திசையன்விளை- இட்டமொழி சாலையில் மினி லாரியை ஓட்டி வந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது மினி லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்த்தி படுகாயம் அடைந்தார். அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.