கோட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மேல்மலையனூர் அருகே கோட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-14 19:23 GMT
மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே பெருவளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக  நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். இதையடுத்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. விழாவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், துணை தலைவர் சுப்பிரமணியன், இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் மற்றும் திரளான  பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்