தூங்கிக்கொண்டிருந்த பெயிண்டர் மர்ம சாவு

தூங்கிக்கொண்டிருந்த பெயிண்டர் மர்மமாக இறந்தார்.;

Update: 2022-03-14 18:55 GMT
கரூர்
நொய்யல்,
கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோதசிரா சாட்டேகான்பரப்பு ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சஜயன் (வயது 43). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் வாடகை வீட்டில் கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ், அப்துல் நசீர், மற்றொரு ராஜேஷ் ஆகியோருடன் தங்கி மண்மங்கலத்திலுள்ள ஒரு கம்பெனியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். அவருடன் தங்கி இருந்தவர்களும் இரவு தூங்கினர். பின்னர் நேற்று காலையில் நண்பர்கள் எழுந்து பார்த்த போது சஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சஜயன் மகன் சஜின்குமார் கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்