கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தீ விபத்து

கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே முட்புதரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-03-14 18:15 GMT
கரூர்
கரூர், 
கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே காலி இடத்தில் ஏராளமான முட்புதர்கள் உள்ளன. இந்த இடத்தில் வெயிலின் காரணமாக காய்ந்துள்ளதால் நேற்று காலை முட்புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

மேலும் செய்திகள்