பள்ளி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
கரூர்,
கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ஒரு மாணவர் புஞ்சை புகளூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுகளாக அந்த மாணவரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர், மாணவியுடன் பலமுறை உடலுறவு கொண்டதால் தற்போது அந்த மாணவி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிந்து, பள்ளி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.