மனைவியை தாக்கிய என்ஜினீயர் கைது
மனைவியை தாக்கிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). சிவில் என்ஜினீயர். இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகா (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கரூர் வந்த கணவர்-மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கார்த்திகாவை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திகா கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கார்த்திகா கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்