ஐ.டி. நிறுவன ஊழியர்-நண்பரை தாக்கிய 3 பேர் கைது

ஐ.டி. நிறுவன ஊழியர்-நண்பரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-14 18:08 GMT
கரூர்
கரூர்,
கரூர் குமரப்பாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் திவாகர் (28). இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு நண்பர் சுரேஷ்கோபி. இவர்கள் 3 பேரும் கரூர் அறிவொளி நகர் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த வெங்கமேட்டை சேர்ந்த இளவரசன், தினேஷ், மோகன் பாபு, ரகுமான் ஆகிய 4 பேரும் சேர்ந்து, நின்று கொண்டிருந்த சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்களிடம் இங்கு ஏன் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். 
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து சீனிவாசன், திவாகர் ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து, இளவரசன், மோகன்பாபு, ரகுமான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள தினேசை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்