மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கைக்கு உடந்தையாக இருந்த பாதிரியார் கைது

சேத்துப்பட்டு அருகே விடுதி மாணவர்களுடன் வார்டன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்கு உடந்தையாக இருந்ததாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-14 17:51 GMT
சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே விடுதி மாணவர்களுடன் வார்டன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்கு உடந்தையாக இருந்ததாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

ஓரினச்சேர்க்கை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள பத்தியாவரம் கிராமத்தில் அன்பு ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் உள்ளது. 

இந்த காப்பகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் அடையபுலம் கிராமத்தை சேர்ந்த துரைபாண்டியன் (வயது 37) என்பவர் அன்பு மாணவர்கள் விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். 

இவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சைல்டு லைன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.

 இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சைல்டு லைன் மூலம் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சிறார் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வார்டன் துரைபாண்டியனை கைது செய்தனர்.

பாதிரியார் கைது

இந்தநிலையில் விடுதி வார்டன் துரைபாண்டியனுக்கு உடந்தையாக இருந்ததாக பாதிரியார் சகாயராஜ் (53) என்பவர் கைது செய்யப்பட்டார்.

 அன்பு ஆதரவற்ற மாணவர்கள் விடுதி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மையிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.

போலீசார் விசாரணையில் பாதிரியார், விடுதி வார்டன் துரைபாண்டியன் மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட உடந்தையாக இருந்தது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்