ரூ.25 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி ஊராட்சி தலைவர் ஆய்வு
திருநகரியில் ரூ.25 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை ஊராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:-
திருவெண்காடு அருகே திருநகரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் 15-வது மாநில நிதிக்குழு மானியம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இன்னும் 3 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். மேலும் ஊராட்சியில் பல்வேறு சாலைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது துணைத் தலைவர் மகாலட்சுமி, ஊராட்சி உறுப்பினர்கள் வெங்கடேஷ், பாபு, ராஜு மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.