தர்மபுரியில் புதிய போலீஸ்காரர்களுக்கு பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் புதிய போலீஸ்காரர்களுக்கு பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-14 17:40 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் புதிய போலீஸ்காரர்களுக்கு பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.
போலீசாருக்கு பயிற்சி
போலீஸ் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸ்காரர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 225 புதிய போலீஸ்காரர்களுக்கு தர்மபுரி வெண்ணாம்பட்டி தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில் 7 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய போலீஸ்காரர்களுக்கான பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் போலீஸ் துறையில் புதிதாக சேர்ந்துள்ள போலீஸ்காரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் விவரம் குறித்து விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சுடும் பயிற்சி
இந்த பயிற்சியின்போது போலீஸ்காரர்களுக்கு ஓட்டம், உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, கராத்தே பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, சட்டம் தொடர்பான வகுப்புகள், துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு மாதம் போலீஸ் நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்