அரூர் அருகே கேட்பாரற்று நின்ற மோட்டார் சைக்கிள் மீட்பு

அரூர் அருகே கேட்பாரற்று நின்ற மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்

Update: 2022-03-14 17:40 GMT
அரூர்:
அரூர் அருகே தீர்த்தமலை சாலையில் நாயக்கன்கொட்டாய் அருகே 2 நாட்களாக மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரூர் போலீசார் விரைந்து சென்று மோட்டார் சைக்கிளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்து யாராவது நிறுத்தி விட்டு சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்