ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

ஆட்ேடா கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2022-03-14 17:40 GMT
நாமக்கல்:-
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 61). ஆட்டோ டிரைவர். இவர் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வசித்து வரும் தன்னுடைய 3 வயது பேரனை அழைத்து வருவதற்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் புதன்சந்தை நோக்கி வந்தார். புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே வந்த போது நடராஜனின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த நடராஜனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜன் போகும் வழியிலேயே இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து நடராஜனின் மனைவி மல்லிகா (52) புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்