மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடத்தினர்.;
நாமக்கல்,:-
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடத்தினர்.
மின்வாரிய பணியாளர்கள்
1.12.2019 முதல் வழங்கிட வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி, பொருளாளர் சக்திவேல், செயல் தலைவர் சசிகுமார், அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தின் போது அடிப்படை பதவிகளுக்கான காலி பணியிடங்களை மின்சார வாரியமே தேர்வு செய்து நிரப்பிட வேண்டும். துறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிறுத்திய, ஆண்டு உயர்வை மீண்டும் வழங்க வேண்டும்.
மேட்டூர் பணிமனையின் உற்பத்தி திறனை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.