கணினி ஆபரேட்டரின் வங்கி கணக்கில் மாயமான ரூ56 ஆயிரம் மீட்பு

தர்மபுரி அருகே கணினி ஆபரேட்டரின் வங்கி கணக்கில் மாயமான ரூ56 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.

Update: 2022-03-14 17:38 GMT
தர்மபுரி:
தர்மபுரி சத்திரம் மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 35). கணினி ஆபரேட்டர். இவருடைய சேமிப்பு கணக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 674 தொகை மாயமானது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நூதன மோசடி குறித்து தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் மாயமான தொகையில் ரூ.56 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த தொகையை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், ஸ்ரீகாந்திடம் மீண்டும் வழங்கினார்.
=======

மேலும் செய்திகள்