ஓசூரில் ரூ3½ கோடியில் புதிய உள் விளையாட்டு அரங்கம் முதல்அமைச்சர் முகஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ஓசூரில் ரூ3½ கோடியில் புதிய உள் விளையாட்டு அரங்கை முதல் அமைச்சர் முகஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2022-03-14 17:38 GMT
ஓசூர்,:
ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிருஷ்ணகிரி பிரிவு சார்பில் ரூ.3 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் மற்றும் நடைபாதை ஆகியவை திறப்பு விழா நடந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து ஓசூர் அந்திவாடி புதிய விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
 இங்கு 177.65 சதுர மீட்டர் பரப்பளவில் உடற்பயிற்சி கூடம், 608 சதுர மீட்டர் பரப்பளவில் கூடைப்பந்து மைதானம் மற்றும் 800 மீட்டர் நீளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர் பாக்கியலட்சுமி குப்புசாமி, பூனப்பள்ளி கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்