காவேரிப்பட்டணம் அருபகே டிரைவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
காவேரிப்பட்டணம் அருகே டிரைவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் செவுட்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 32). டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் மேம்பாலம் மலையாண்டஅள்ளி பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தர்மனை வழிமறித்து அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (19), காவேரிப்பட்டணம் தரணிதரன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.