விவசாய தொழிலாளி மீது தாக்குதல்

விவசாய தொழிலாளியை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-14 18:45 GMT
கொள்ளிடம்:-

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஓலயாம்புத்தூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது70). விவசாய தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடேசன் (46). இவர் கடந்த சில நாட்களாக ரத்தினத்திடம் தனியாக தனக்கு வீடு கட்டித் தரும்படி கேட்டு வந்தார். ஆனால் வீடு கட்டி கொடுக்க கால தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் சம்பவத்தன்று தனது தந்தை ரத்தினத்தை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த ரத்தினம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ரத்தினம் கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்