ரூ.7¾ கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

ரூ.7¾ கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

Update: 2022-03-14 17:32 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ஆட்டுப்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகளுக்கான தங்கும் விடுதி ரூ.7 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து குத்துவிளக்கேற்றி விடுதியை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், கலால் உதவி ஆணையர் சத்ய பிரசாத், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மங்கையர்க்கரசி சுப்பிரமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் விநாயகம், ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நித்தியா, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்