உக்ரைனில் இருந்து 2 மாணவர்கள் அரக்கோணம் திரும்பினர்
உக்ரைனில் இருந்து 2 மாணவர்கள் அரக்கோணம் திரும்பினர்
அரக்கோணம்
அரக்கோணத்தை சார்ந்த பிரபாகரன்-வாணி தம்பதியரின் மகன் ஸ்ரீநாத் மற்றும் பாஸ்கர்- சித்ரா தம்பதியரின் மகன் மோனிஷ்கர் ஆகியோர் உக்ரைன் சுமி நகரில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகின்றனர். ரஷியா- உக்ரைன் போர் காரணமாக இருவரும் ஊர் திரும்பினர்.
ஊர்திரும்பியது குறித்து அரக்கோணம் வந்த மாணவர்கள் கூறுகையில் எங்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமி நகரில் எங்களுக்கு உதவிய தன்னார்வளர்களுக்கும் மற்றும் போலந்து அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதனையடுத்து ஸ்ரீநாத்தின் தந்தை பிரபாகரன் கூறுகையில் எனது மகன் சுமி நகரில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு பேசிய போது இங்கு குண்டுவீச்சு, ஏவுகணைதாக்குதல் சத்தம் கேட்கிறது. அபாய ஒலி எழுப்பும்போது பதுங்கு குழிகளுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார். உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைத்த தமிழக முதல்வருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மீட்பு பணிகளில் பணியாற்றியவர்களுக்கும், குறிப்பாக மாணவர்கள் நிலை குறித்து உடனுக்குடன் செய்தி வெளியிட்ட தந்தி டிவிக்கும் நன்றி தெரிவித்தார்.