வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

Update: 2022-03-14 17:14 GMT
சிவகங்கை, 
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் தி.மு.க சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகள் பங்கேற்றன. ஒரு காளையை அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குழு களமிறங்கி காளையை அடக்கினர். இதில் ஒவ்வொரு காளையாக களத்தில் விடப்பட்டு அதை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. சில காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 3 மாடு பிடி வீரர்க்கு  லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியை சிவகங்கை, நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், கண்டிப்பட்டி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்