என் எல் சி சுரங்க விரிவாக்க பணி 150 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

என் எல் சி சுரங்க விரிவாக்க பணி 150 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு;

Update: 2022-03-14 17:13 GMT
கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு நேற்று நெய்வேலி ஒர்க்‌ஷாப் கேட், ஆட்டோ கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கப்பகுதி-1 அருகில் 150 சதுர அடி தூரத்தில் வசித்து வருகிறோம். என்.எல்.சி.யில் தினக்கூலியாகவும், மறைமுக தினக்கூலி வேலை செய்து கடந்த 50 ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் நிர்வாகம் சுரங்கம்-1 விரிவாக்க பணி என்று கூறி, தாண்டவன்குப்பம், பார்க் தாண்டவன்குப்பம், அண்ணா பஸ் நிறுத்தம், ஆட்டோ கேட் பகுதிகளை காலி செய்து வருகிறது. இதில் 60 சதவீதம் பேர் காலி செய்து விட்டனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் 150 குடும்பங்களை சேர்ந்த எங்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் நிர்வாகம் காலி செய்ய வலியுறுத்தி வருகிறது. ஆகவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்