கடலூர் கலெக்டர் அலுவலக வாசலில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலக வாசலில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் வழியாக ஒரு பெண் பெட்ரோல் பாட்டிலுடன் சென்றார். இதை பார்த்த போலீசார் அவரை பின் தொடர்ந்து வேகமாக சென்றனர். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிக்க முயன்றனர். இதை பார்த்த அந்த பெண் தன்னுடைய மொபட்டில் பெட்ரோல் இல்லாததால், வாங்கி வந்ததாக கூறி, அந்த பெட்ரோலை தனது மொபட்டில் ஊற்றினார். இதை பார்த்த போலீசார் அங்கிருந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.