வாலிபருக்கு கொலை மிரட்டல் 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் சூரியபிரகாஷ் (வயது 25). சம்பவத்தன்று இரவு இவர் சங்கராபுரத்தில் இருந்து வடபாலப்பட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அரசம்பட்டு காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் பிரவீன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சூரியபிரகாசை மறித்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் பிரவீன், நிதிஷ்குமார், புகழேந்தி, கதிர் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்(20), நிதிஷ்குமார்(20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.