பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

திருமருகல் ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடந்தது.

Update: 2022-03-14 16:54 GMT
திட்டச்சேரி:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருமருகல் ஒன்றியத்தின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளியில்,  திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஏனங்குடி மேல்நிலைப் பள்ளி, கங்களாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொறக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் கடந்த 7-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியை திருமருகல் வட்டார வளமைய  மேற்பார்வையாளர்(பொறுப்பு) சந்தானம் தொடங்கி வைத்தார்.  கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுனர்கள் துர்க்கா, கதிரொளி, பட்டதாரி ஆசிரியர்கள் பாரதிதாசன், சுரேந்திரன், இடைநிலை ஆசிரியர்கள் சகாயராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் செயல்பட்டனர். இந்த பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்து காலையில் 5 நபர்கள் கொண்ட குழுவும், மதியம் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைத்தலின் அவசியம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் பிரபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்