குன்னூர் அருகே வனப்பகுதியில் தீப்பிடித்தது
குன்னூர் அருகே வனப்பகுதியில் தீப்பிடித்தது
குன்னூர்
குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அதுபோன்று வனப்பகுதியிலும் கடும் வறட்சி ஏற்பட்டு வருவதால் செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்து உள்ளன.
இந்த நிலையில் குன்னூர் அருகே கல்குழி பாரதிநகர் குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த ராணுவ பயிற்சி கல்லூரி தீயணைப்பு மற்றும் குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தண்ணீர் முடிந்து விட்டதால் பொதுமக்கள் உதவியுடன் குடம் மற்றும் வாளிகளில் தண்ணீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக வனப்பகுதியில் உள்ள முள்ளம்பன்றி, பாம்புகள் வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.