கர்நாடகத்தில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம்?

கர்நாடகத்தில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு சட்டசபையில் பசவராஜ் பொம்மை பதில் அளித்தார்.;

Update:2022-03-14 21:39 IST
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பிரச்சினை கிளப்பினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் நிரந்தர துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளேன். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சித்தராமையா கூறியுள்ளார்.

  அவர்கள் வெளி குத்தகை அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். அரசு அந்த நிறுவனத்திற்கு சம்பளத்தை அனுப்பிவிடும். ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை அந்த நிறுவனங்கள் தாமதப்படுத்துவதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து அந்த தொழிலாளர்களுக்கு அவா்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்