டிராக்டர் மோதி வாலிபர் பலி

மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்

Update: 2022-03-14 16:06 GMT
போடி:
உத்தமபாளையம் அம்மாபட்டியை சேர்ந்தவர் கருமலை (வயது 27). கொத்தனார். இவர், மோட்டார் சைக்கிளில் போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தலைச்சேரியை அடுத்த எஸ்.தர்மத்துபட்டி அருகே எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாரம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த டிராக்டா் டிரைவர் ஆரோக்கியசாமி (42)யை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்