உடனடியாக வீடு ஒதுக்கி கலெக்டர் உத்தரவு

உடனடியாக வீடு ஒதுக்கி கலெக்டர் உத்தரவு;

Update: 2022-03-14 14:49 GMT
கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீடு கேட்டு 55 மனுக்கள், வீட்டுமனைப்பட்டா கேட்டு 6 மனுக்கள், வேலைவாய்ப்பு கேட்டு 15 மனுக்கள் உள்பட மொத்தம் 308 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதற்கிடையில் கோவை போக்குவரத்துத்துறையில் பணிபுரியும் ஜியாவுல்லா என்பவர் தனது மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் வந்து வீடு கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வீடு ஒதுக்கி கலெக்டர் சமீரன் உடனடியாக உத்தரவிட்டார். இதனால் அவருக்கு, அவர்கள் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்