கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;

Update: 2022-03-14 14:49 GMT
கருமத்தம்பட்டி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரில் விநாயகர், முருகர், மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தார்.

இதற்கிடையில் கோவில் வளாகத்தில் திருவிழாவையொட்டி கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி கும்மியாட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எஸ்.பி.வேலுமணி, அங்கிருந்தவர்களுடன் ஒயிலாட்டம் ஆடினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்