உலக நன்மைக்காக மங்கள சண்டி மகா யாகம்

உலக நன்மைக்காக மங்கள சண்டி மகா யாகம்

Update: 2022-03-14 14:28 GMT
உடுமலை, 
உடுமலை நேரு வீதியில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில். உலக நன்மை வேண்டி இந்த கோவில் வளாகத்தில் நேற்றுஅய்யர்மலை நாகரத்தின தீட்சிதர் தலைமையில்ஸ்ரீமங்கள சண்டி மகாயாகம் நடந்தது.இந்த மங்கள சண்டி மகாயாகத்தில் வேத பிராத்தனை, மகாகணபதி பூஜை, மகா சங்கல்பம், கலச ஸ்தாபனம், ஆவாஹனம், சண்டி ஆவரண அர்ச்சனை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சண்டி ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, விசேஷ மகா பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த மங்கள சண்டி மகாயாகம் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்