உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சாமளாபுரத்தில் பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சாமளாபுரத்தில் பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2022-03-14 14:24 GMT
வீரபாண்டி:
உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சாமளாபுரத்தில் பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
நோட்டீசு
சாமளாபுரம் பகுதியில்  100 ஆண்டுகளுக்கும் மேலாக 120 குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் மக்கள் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இந்த நிலையில் அருந்ததியினர் மக்கள் கட்டிய வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாகவும், அவற்றை உடனே காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித் துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. 
ஆனால் அருந்ததியினர் மக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும்  கடந்த 13 நாட்களாக   பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். 
ஆர்ப்பாட்டம் 
இந்த நிலையில் நேற்று14-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துைற நிர்வாகம் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடக் வேண்டும்.  அதே இடத்தில் நிலம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  பொதுமக்கள், அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது . 120 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்