சாத்தூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு அருகே சாத்தூர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-14 14:19 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சாத்தூர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

ஸ்ரீ சாத்தூர் பெருமாள் கோவில் 

கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ சாத்தூர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விழா நேற்று முன்தினம் கோ பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வாஸ்து பூஜை ரக் ஷா பந்தனம் கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து சிலைகளுக்கு திருமஞ்சனம், மருந்து சாத்துதல், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்தல், விமான கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7.20 மணிக்கு வேதமந்திரம் மூழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 
இதையடுத்து சாத்தூர் பெருமாள் மற்றும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.. இதில் சாத்தூர் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் லட்சுமி சமேத ஸ்ரீ சாத்தூர் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிணத்துக்கடவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்