பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
திருப்பூர்:
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வினீத் வழங்கி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ‘தேசிய குடற்புழு நீக்க தினம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 8 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 4 ஆயிரம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று (நேற்று) முதல் வழங்கப்படுகிறது.
குடற்புழு தொற்றால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். இதற்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை சாப்பிடுவது அவசியம்’ என்றார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.